நம்ம எல்லாருக்கும் சின்ன வயசுல நம்ம பாட்டி பல கதை சொல்லி இருப்பாங்க. அதை இப்போ நெனச்சு பாத்தால் ஒரே வேடிக்கையா இருக்கும். அந்த மாதிரி ஒரு வேடிக்கை கதை தான் என் பாட்டி எனக்கு பல தரவை சொன்ன இந்த குருவி கதை(No logic, only Magic). இப்போ கதைக்கு போகலாம்
ஒரு ஊருல ஒரு குருவி இருந்துச்சாம் (As usual).
வேலை வெட்டி இல்லாத அந்த குருவி ஒரு நாள் தெரு ஓரமா இருந்த குப்பையை கிளருச்சாம் (hero introduction).
குப்பையை கிளருன குருவிக்கு ஒரு நெல்மணி கிடைச்சதாம் (story starting).
கையில் கிடைச்ச நெல்லை குத்தி குத்தி அரிசி ஆக்குச்சாம். அரிசிய குத்தி குத்தி குருணை
ஆக்குச்சாம்(Characterization: Hard working hero).
அரிசியை குத்தி குத்தி களைச்சுப்போன குருவி அந்த குருணையை எடுத்துகிட்டு ஒரு பாட்டி கிட்ட போய், "பாட்டி பாட்டி எனக்கு இதை வச்சு ஒரு பாயாசம் பண்ணிக்குடு" அப்டின்னு சொல்லுச்சாம் (kuruvi epdi paesum nu kaeka koodathu).
சோர்ந்துபோய் இருந்த அந்த குருவிய பாத்த பாட்டிக்கு ஒரே பாவமா இருந்துச்சாம். அதனால அந்த பாட்டி "போயிட்டு சாயங்காலம் வா, பண்ணி வைக்கறேன்" னு சொல்லி அனுப்பி வைச்சாங்களாம்(Sentiment!!!).
சாயங்காலம் திரும்பி வந்த குருவி, பாட்டி பாயசம் பண்ணி வைச்சிருக்கறதை பாத்ததும் ரொம்ப ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப சந்தோஷப்பட்டுச்சாம்(Apdiyae cut panni, oru foreign song podungappa. Ithellam sollanuma enna).
நம்ம பாட்டிக்கு Thanks சொல்லிட்டு பாயாசத்த தூக்கு சட்டியோட தூக்கிட்டு குளத்தாங்கரைக்கு பறந்து போயிருச்சாம்(vidaa muyarchi, viswarooba vetri!!!).
கரைல வச்சி மூடிய திறந்தவுடனே வாசனை அப்டியே மூக்க துளைக்க!!!, சுட்டு பொசுக்கர பாயாசத்த குடிக்க கபக்னு தலைய தூக்குக்குள்ள விட்டு மடக்னு குடிச்சதும், சூடு தாங்காம பாத்திரத்தை தட்டிவிட்டு பாயாசமெல்லாம் குளத்துல கொட்டிருச்சாம்(Aiyo paavam).
குருவிக்கு பாவம் வாயெல்லாம் பொத்து போச்சு. பாயாசம் கொட்டிருச்சேனனு ரொம்ப வருத்த பட்டுச்சு :(. (Thenpandi cheemaiyilae song backgroundla podunga)
சரி, தண்ணியாச்சும் குடிக்கலாம் அப்டின்னு சொல்லி குளத்து தண்ணிய குடிச்சா, தண்ணி பாயாசம் மாதிரி தித்தித்ததாம். குருவிக்கு ஒரே சந்தோசம். குளத்து தண்ணிய பாயாசம்னு நெனச்ச குருவி, வைக்கோலை எடுத்து பின்னால சொரிகிட்டு எல்லா தண்ணியும் குடிச்சு பெரிய பூதம் மாதிரி ஆகிருச்சு(Second half la, herovin asura valarchi).
ஆடி ஆடி கஷ்டபட்டு நடந்து வர குருவிய பாத்து, அங்க மேஞ்சிகிட்டு இருந்த குதிரை சிரிக்கவும் கோபத்துல அந்த குதிரைய முழுங்கிருச்சாம்.(Singam ondru purapattathae song ippo podunga)
திருவாரூர் தேர் மாதிரி அசஞ்சு வர குருவிய எதிர்ல வர யானை கிண்டல் பண்ண, அந்த யானைய முழுங்கி இன்னும் பெருசா ஆயிருச்சு.(evana irunthaalum vettuvaen, evana irunthaalum vettuvaen)
அப்டியே நடந்து வந்த குருவிக்கு தூக்கம் கண்ணை கட்ட, பாட்டி கிட்ட போய் தூங்க இடம் கேட்டுச்சாம். "வீட்லலாம் இடம் இல்ல, போய் மாட்டு கொட்டாய்ல படு"ன்னு பாட்டி சொன்னதால மாட்டு கொட்டாய்ல படுத்து கொர் கொர் ன்னு கொரட்ட விட்டு தூங்கிருச்சாம். (Inga than kathaila twist vaikarom.....)
அங்க இருந்த மாடு, குருவி பின்னால வைக்கோலை பாத்ததும், சாப்பிட அதை இழுத்துச்சாம். அவ்ளோதான், குருவிக்கு உள்ள இருந்த தண்ணியெல்லாம் வெளிய கொட்டி வீடே குளம் மாதிரி ஆயிருச்சாம். உள்ள போன யானை, குதிரை எல்லாம் அந்த தண்ணில நீச்சல் அடிச்சி வெளிய வர, நம்ம குருவி சின்னதாகி பறந்து போயிருச்சாம்! (Happy ending)!!!!!!!!
இப்போ வர மசாலா படத்துக்கும், என் பாட்டி எனக்கு சொன்ன Bed time storyக்கும் பெரிய வித்யாசம் இல்லன்னு எனக்கு தோணுது. உங்களுக்கு எப்படி?????