தமிழர்கள் அனைவரும் கொண்டாட வேண்டிய இந்த நன்னாள் தற்பொழுது அரசியல்வாதிகளால் பந்தாடப்பட்டு வருகிறது. தை முதல் நாளை சூரியனும், சித்திரை முதல் நாளை இலையும் புத்தாண்டு என்று கூற, எப்படி புத்தாண்டை கொண்டாடலாம் என்று யோசிப்பதற்கு பதிலாய் எது புத்தாண்டு என்று யோசிக்கிறோம்.
சித்திரை முதல் நாளை ஏன் புத்தாண்டாக கொண்டாடுகிறோம் என்று ஆராய்ந்ததால் இந்த குழப்பத்திற்கு விடை கிடைத்ததோடு உலகின் மற்ற புத்தாண்டை விட சித்திரை புத்தாண்டே சிறப்பு வாய்ந்தது என்று என்னால் அறிய முடிந்தது.
சித்திரை புத்தாண்டின் சிறப்புகள்:
- தமிழ் ஆண்டுகள் எண்களால் குறிக்கப்படாமல் பெயர்களால் குரிக்கபடுகிறது.
- பிரபவ ஆண்டில் தொடங்கி அட்சய ஆண்டு வரை தமிழில் மொத்தம் 60 ஆண்டுகள் உள்ளன.
- அட்சய ஆண்டின் முடிவில் இந்த 60 ஆண்டுகளும் முதலில் இருந்து சுழற்சியாக தொடர்கின்றன.
- ஒவ்வொரு ஆண்டிற்கும் ஒரு பஞ்சாங்கம் உள்ளது. பஞ்சாங்கம் என்பது ஜோசியம் பார்பதற்கு மட்டுமன்று. சந்திர கிரஹனம், சூர்ய கிரஹனம் மற்றும் ஒவ்வொரு விண்வெளி அசைவும் அதிலே துல்லியமாக நேரத்தோடு கணிக்கப்பட்டுள்ளது.
- இதில் வியக்கதக்க விஷயம் என்னவெனில் இந்த 60 பஞ்சாங்கங்களே ஒவ்வொரு சுழற்சியிலும் பயன்படுத்தப்படுகிறது. அதாவது சித்திரை முதல் நாள் நந்தன ஆண்டன்று ஒரு சந்திர கிரஹனம் நடந்தால், 60 ஆண்டிற்குப்பிறகு அடுத்த சுழற்சியில் சித்திரை முதல் நாள் நந்தன ஆண்டன்று அதே நேரத்தில் சந்திர கிரஹனம் நடக்கும்.
- இவ்வாறு விண்வெளியின் ஒவ்வொரு நிகழ்வும் 60 ஆண்டு இடைவெளியில் வரிசை மாறாமல் நிகழ்கிறது என்பதை நம் முண்ணோர்கள் எந்த வித நவீன கருவிகளும் இன்றி கண்டுபிடித்து, அதன் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டிற்கும் பெயர் சூட்டியுள்ளனர். இந்த 60 ஆண்டுகளும் சித்திரை முதல் நாளான இன்றே தொடங்குகிறது. (இன்று கர ஆண்டு முடிந்து நந்தன ஆண்டு உதயமாகின்றது).
இப்படி பல சிறப்புக்கள் கொண்ட சித்திரை முதல் நாளை புத்தாண்டாக கொண்டாடுவதில் பெருமை கொள்வோம்.
No comments:
Post a Comment